search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி மரணம்"

    • ஆம்புலன்ஸ் விபத்தில் உயிரிழந்த சுப்பிரமணியன் அப்பகுதியில் உள்ள ஒரு பல சரக்கு கடையில் வேலை பார்த்து வந்தார்.
    • சம்பவம் நடந்த இடத்திற்கு சுத்தமல்லி போலீசார் விரைந்து வந்து சுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் முக்கூடல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் உள்ளது. இந்த ஆம்புலன்சை ஆலங்குளத்தை சேர்ந்த அன்னராஜ்(வயது 29) என்பவர் ஓட்டி வருகிறார்.

    இவர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் நோயாளியை கொண்டு சென்று இறக்கிவிட்டு மீண்டும் இன்று அதிகாலையில் முக்கூடலுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். சுத்தமல்லியை அடுத்த கொண்டாநகரம் அருகே ஆம்புலன்ஸ் வந்தபோது திடீரென அதன் ஆக்சில் துண்டானது.

    இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்த சுத்தமல்லி கோமதிநகரை சேர்ந்த சுப்பிரமணியன்(62) என்பவர் மீது மோதி அங்கிருந்த மரத்தின் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    சம்பவம் நடந்த இடத்திற்கு சுத்தமல்லி போலீசார் விரைந்து வந்து சுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்புலன்ஸ் விபத்தில் உயிரிழந்த சுப்பிரமணியன் அப்பகுதியில் உள்ள ஒரு பல சரக்கு கடையில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

    • மாணவி கடந்த 1-ந்தேதி மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு பஸ்சில் வந்து கொண்டு இருந்தார்.
    • பஸ்சில் பயணம் செய்த பெரியகுப்பம் கற்குழாய் சாலைப் பகுதியைச் சேர்ந்த தொழிலாளியான ஸ்டீபன் என்பவர் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த அரண்வாயல்குப்பம் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி மணவாளநகரில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் கடந்த 1-ந்தேதி மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு பஸ்சில் வந்து கொண்டு இருந்தார். அப்போது அதே பஸ்சில் பயணம் செய்த பெரியகுப்பம் கற்குழாய் சாலைப் பகுதியைச் சேர்ந்த தொழிலாளியான ஸ்டீபன் (வயது 51) என்பவர் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாணவியின் தந்தை மற்றும் உறவினர்கள் 3 பேர் ஆட்டோவில் வந்து பஸ்சை வழிமறித்து ஸ்டீபனை சரமாரியாக தாக்கினர்.

    இதில் பலத்த காயம் அடைந்த ஸ்டீபன் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஸ்டீபன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை வழக்குபதிவு செய்து மாணவியின் தந்தை உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்து உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சம்பவத்தன்று மனவேதனை அடைந்த வேல்முருகன், உடலில் மண்எண்ணெய் ஊற்றிக் கொண்டு பெண் வீட்டுக்கு சென்றார்.
    • வீட்டின் வெளியே நின்று பெண்ணை வேல்முருகன் அழைத்தார்.

    கோவை:

    கோவை மாவட்டம் சூலூர் பட்டணம் காவேரி நகரைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 44). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக வேல்முருகனை அவரது மனைவி பிரிந்து சென்றார். அதன்பிறகு தனியாக வாழ்ந்த வேல்முருகனுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் 2 பேரும் திருமணம் செய்யாமல் கணவன்-மனைவி போல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

    சில காலம் மகிழ்ச்சியாக வாழ்ந்த அவர்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டது. இதனால் அந்த பெண்ணையும் வேல்முருகன் பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது. வேல்முருகன் தனியாக ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தார்.

    சம்பவத்தன்று மனவேதனை அடைந்த வேல்முருகன், உடலில் மண்எண்ணெய் ஊற்றிக் கொண்டு அந்த பெண் வீட்டுக்கு சென்றார். வீட்டின் வெளியே நின்று அந்த பெண்ணை வேல்முருகன் அழைத்தார். ஆனால் அவர் வெளியே வரவில்லை. அந்த பெண்ணின் தம்பி வெளியே வந்து அவள் உன்னிடம் பேச மாட்டாள், நீ இங்கிருந்து போ எச்சரித்தார்.

    காதலி தன்னுடன் பேச மறுத்ததால் வேதனையின் உச்சிக்கே சென்ற வேல்முருகன், மண்எண்ணெய் ஊற்றப்பட்ட தனது உடலில் தீவைத்துக் கொண்டார். தீயில் கருகி அலறித்துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேல்முருகன் பலியானார்.

    இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நெற்குன்றம் அபிராமி நகர் 3வது தெருவை சேர்ந்தவர் அருண் பாலாஜி.
    • தொழிலாளி மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை.

    போரூர்:

    சென்னை நெற்குன்றம் அபிராமி நகர் 3வது தெருவை சேர்ந்தவர் அருண் பாலாஜி (வயது27) கார்பென்டர் வேலை பார்த்து வந்தார்.

    இவரது வீட்டில் இருந்து நேற்று மாலை துர்நாற்றம் வீசியது உடனடியாக அக்கம்பக்கம் உள்ளவர்கள் கோயம்பேடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப் -இன்ஸ்பெக்டர் முனி ரத்னம் மற்றும் போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து பார்த்தபோது அருண் பாலாஜி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    அறையில் அவரது உடல் அருகே ஏராளமான மது பாட்டில்கள் கிடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. அவர் இறந்து 3 நாட்கள் வரை இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×